Vedic Jothidam

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

நியாயமாக  இழந்த பொருட்களை மீண்டும் பெற

மிகுந்த நம்பிக்கையுடன் கால பைரவரின் சந்நிதியில் 27 வெள்ளை மிளகை வெள்ளைத் துணியில் சிறு முடிச்சாக கட்டி அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி தொடர்ந்து 27 நாள் வழிபாட்டால் இழந்த பொருட்கள் மற்றும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.



குறிப்பு :

இதை தயவு கூர்ந்து விமர்சனம் மற்றும் ஏளனம் செய்ய வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
கண்டச் சனி அஷ்டமத்துச் சனி அர்த்தாஷ்டம சனி ஏழரைச் சனி பாதிப்புகள் மற்றும் திருமணத் தடை நீங்க

Qhapw;Wf;fpoik khiy (04.30 Kjy; 06.00 tiu) uhF fhy Ntisapy; fhy igutUf;F 11 nea; jPgk; Vw;wp tpg+jp my;yJ Uj;uhgpN\fk; nra;J til khiy rhw;wp rf];uehk mu;r;rid nra;J topgl;lhy; jpUkzk; MfhjtHfSf;F tpiutpy; jpUkzk; eilngWk;.



,tiu ek;gpf;ifAld; topgl;lhy; tWik, giftHfspd; njhy;iyfs; gak; ePq;fp mtu; mUshy; m\;l I];tu;aq;fSk;, jd ,yhgKk;, tpahghu Kd;Ndw;wk; kw;Wk; gzpahw;Wk; ,lj;jpy; njhy;iyfs; ePq;fp kdjpy; kfpo;r;rpia ngwyhk;.

செவ்வாய், 11 அக்டோபர், 2016



ஷீர்டி சாய்பாபா 108 போற்றி

ஓம் சாயிநாதனே போற்றி
ஓம் சீரடி உறைந்தவனே போற்றி
ஓம் சீர்மிகு புதல்வனே போற்றி
ஓம் அன்பு வடிவானவனே போற்றி
ஓம் அறிவுறுத்துபவனே போற்றி
ஓம் அற்புதம் படைத்தவனே போற்றி
ஓம் எளியோர்க்கு எளியவனே போற்றி
ஓம் வலியோர்க்கு வலியனே போற்றி
ஓம் உலகைக் காப்பவனே போற்றி
ஓம் உவகை தருபவனே போற்றி
ஓம் உளமதை அறிபவனே போற்றி
ஓம் அச்சம் தீர்ப்பவனே போற்றி
ஓம் ஆணவம் அறுப்பவனே போற்றி
ஓம் விட்டலின் வடிவே போற்றி
ஓம் சுவாமியே போற்றி
ஓம் அப்பனே போற்றி
ஓம் பாபா போற்றி
ஓம் பாதமலரோன் போற்றி
ஓம் அனைத்தையும் உடையோனே போற்றி
ஓம் அறத்தை போதித்தவனே போற்றி
ஓம் கருணையின் இருப்பிடமே போற்றி
ஓம் ராமானந்த சீடனே போற்றி
ஓம் வேம்பு நிழல் அமர்ந்தோனே போற்றி
ஓம் வேதம் புரிந்தவனே போற்றி
ஓம் வேட்கை தீர்ப்பவனே போற்றி
ஓம் அபயம் தருபவனே போற்றி
ஓம் தீராத் துயர் தீர்ப்போனே போற்றி
ஓம் தீரர்க்கும் தீரனே போற்றி
ஓம் நற்குணனே போற்றி
ஓம் விற்பபன்னனே போற்றி
ஓம் பொற்பாதனே போற்றி
ஓம் மகிமைகள் புரிந்தவனே போற்றி
ஓம் மகத்துவமானவனே போற்றி
ஓம் மங்கள ரூபனே போற்றி
ஓம் நீரில் சுடர் எரித்தோனே போற்றி
ஓம் நீதியை புகட்டினன் போற்றி
ஓம் கொடைக் குணத்தோனே போற்றி
ஓம் நிறை குணத்தோனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் மறை அறிந்தவனே போற்றி
ஓம் மாண்பு பொருந்தினை போற்றி
ஓம் மாதவத்தோனே போற்றி
ஓம் அபயக் கரத்தோனே போற்றி
ஓம் அமரர்க்கோனே போற்றி
ஓம் அகம் உறைபவனே போற்றி
ஓம் அசகாய சூரனே போற்றி
ஓம் அசுர நாசகனே போற்றி
ஓம் அசவுகர்ய நாசகனே போற்றி
ஓம் அணுவணுவானவனே போற்றி
ஓம் அமுத விழியோனே போற்றி
ஓம் அரங்க நாயகனே போற்றி
ஓம் அன்னம் அளிப்பவனே போற்றி
ஓம் அருவமானவனே போற்றி
ஓம் ஆதாரமானவனே போற்றி
ஓம் ஆனந்தம் அளிப்பவனே போற்றி
ஓம் ஆயிரம் கதிரொளி கொண்டவனே போற்றி
ஓம் விந்தைகள் புரிந்தோனே போற்றி
ஓம் ஆபத்பாந்தவனே போற்றி
ஓம் இக பரசுகம் அருள்பவனே போற்றி
ஓம் இச்சா சக்தியே போற்றி
ஓம் கிரியா சக்தியே போற்றி
ஓம் ஞான சக்தியே போற்றி
ஓம் இமையவனே போற்றி
ஓம் இங்கித குணத்தினனே போற்றி
ஓம் இம்மையில் அருள்பவனே போற்றி
ஓம் மறுமையில் அருள்பவனே போற்றி
ஓம் இருள் நீக்குவோனே போற்றி
ஓம் ஈகை கொண்டவனே போற்றி
ஓம் ஈடில்லா புகழோனே போற்றி
ஓம் ஈர நெஞ்சினனே போற்றி
ஓம் உலகைக் காப்பவனே போற்றி
ஓம் உமாமகேசுவரனே போற்றி
ஓம் உயிராய் நிற்பவனே போற்றி
ஓம் உவகை அளிப்பவனே போற்றி
ஓம் உண்மைப் பொருளானவனே போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
ஓம் எல்லையில்லாப் பொருளே போற்றி
ஓம் எமபயம் நீக்குவோனே போற்றி
ஓம் ஐயம் களைபவனே போற்றி
ஓம் ஒப்பில்லாதவனே போற்றி
ஓம் ஓங்கார ரூபனே போற்றி
ஓம் ஓங்கி நிற்கும் புகழோனே போற்றி
ஓம் ஓளடதமானவனே போற்றி
ஓம் சாகித்யம் அருள்பவனே போற்றி
ஓம் சிகரம் அமர்ந்தவனே போற்றி
ஓம் சுத்த ஆனந்தனே போற்றி
ஓம் சூதறுப்பவனே போற்றி
ஓம் சூனியம் களைபவனே போற்றி
ஓம் செம்மலரடியோனே போற்றி
ஓம் ஞாலம் தெரிந்தவனே போற்றி
ஓம் ஞானச் சுடரொளியே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் சச்சிதானந்தனே போற்றி
ஓம் பண்பின் வடிவானவனே போற்றி
ஓம் பலம் அருள்வோனே போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்போனே போற்றி
ஓம் தீவினைகள் போக்குவோனே போற்றி
ஓம் நன்மைகள் தருபவனே போற்றி
ஓம் பீடை ஒழிப்பவனே போற்றி
ஓம் பஞ்சம் தடுப்போனே போற்றி
ஓம் அன்னை வடிவினனே போற்றி
ஓம் எந்தையாயிருப்பவனே போற்றி
ஓம் பகைமை குணம் நீக்குவோனே போற்றி
ஓம் மகிமைகள் புரிபவனே போற்றி
ஓம் மகாயோகியே போற்றி
ஓம் மகத்துவமானவனே போற்றி
ஓம் வல்வினை முடிப்பவனே போற்றி
ஓம் நிர்மல வடிவினனே  போற்றி போற்றி



ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவின் மந்திரங்கள்

'சாய்பாபா..' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்' என்ற சொல்லுக்குஇ 'சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தமாம். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர்.

சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:

ஓம் ஷிர்டி வாஸாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ ஸாய் ப்ரசோதயாத்.

தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

ஷீரடி ஸாயி பாபாவின் த்யான ஸ்லோகம்:

பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி.

ஷீரடி சாயி பாபாவின் மூல மந்திரம்:

"ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி".

ஸ்ரீ ஷீரடி சாய் பாபா தியானச்செய்யுள்:

சாயிநாதர் திருவடி

ஸாயி நாதர் திருவடியே
ஸம்பத் தளிக்கும் திருவடியே
நேயம் மிகுந்த திருவடியே
நினைத்த தளிக்கும் திருவடியே
தெய்வ பாபா திருவடியே
தீரம் அளிக்கும் திருவடியே
உயர்வை யளிக்கும் திருவடியே.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

கே.பி. முறையில் சிறந்த ஜோதிடருக்கான விதிமுறைகள்
1) இலக்கின பாவத்தின் உப நட்சத்திராதிபதி 9, 12-ம் வீட்டின் குறிகாட்டிகளானால் சிறந்த ஜோதிடராகலாம். 12ம் இடம் ஜோதிட அறிவையும், 9ம் இடம் உயர்கல்வியைத் தரும் பாவங்களாகும்.

2) குருவின் அருளாசியின்றி எந்த அறிவையும் பெற இயலாது என்பது ஜோதிட விதியாகும். குரு 9, 12-ம் வீட்டின் உப நட்சத்திரமானால் ஜோதிட ஞானம்
பெறலாம்.

3) சனி அல்லது சந்திரன் 9, 12ம் பாவத்தின் உப நட்சத்திரமானால் ஜோதிட ஞானம் பெறலாம்.
4) சனி அல்லது சந்திரன் 9, 12ம் வீட்டைக் குறிப்பவர்களாலானும் மறைபொருள் அறிந்த
வருங்கால வாழ்விற்கு வழிகாட்டும் ஜோதிடராகலாம்.

5) யுரேனஸீக்கும் - குருவிற்கும் சம்பந்தம் ஏற்பட்டால் பல ஜோதிட நூல்களை எழுதும் ஆற்றல் உடையவராகலாம்.

6) குரு, புதன் ஜோதிடத்திற்கு காரகர்கள். 2ம் இடம் வாக்கு மற்றும் யோகத்தையும் தரும் இடமாகும்.

7) சனிக்கும். சந்திரனுக்கும் 1, 3, 9, 10-ம் இடம் சம்பந்தம் சிறந்த ஜோதிட ஆராய்ச்சி செய்யும் திறமையைத் தரும்.

ஜோதிட மார்த்தாண்ட திரு.கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஜாதகம். இந்த நூற்றாண்டில் ஜோதிடத்தில் ஒரு புதிய முறையை உபநட்சத்திராபதி முறையை ஜோதிட உலகிற்குத் தந்த மேதையாவார்.

பாவம்                                                              உபநட்சத்திராபதி
1.                                                                               செவ்வாய்
2.                                                                                  புதன்
3.                                                                                  புதன்
4.                                                                                   ராகு
5.                                                                                   சனி
6.                                                                                  புதன்
7.                                                                                சந்திரன்
8.                                                                                சந்திரன்
9.                                                                                  புதன்
10.                                                                           செவ்வாய்
11.                                                                               புதன்
12.                                                                             சுக்கிரன்
கிரகம்                                         நட்சத்திராபதி                              உபநட்சத்திராபதி
1. சூரியன்                                         ராகு                                               சுக்கிரன்
2. சந்திரன்                                     சந்திரன்                                         செவ்வாய்
3. செவ்வாய்                                 சந்திரன்                                            சுக்கிரன்
4. புதன்                                               ராகு                                                  ராகு
5. குரு                                             சுக்கிரன்                                          சந்திரன்
6. சுக்கிரன்                                     சூரியன்                                              சனி
7. சனி                                               சனி                                                  சந்திரன்
8. ராகு                                         செவ்வாய்                                           சந்திரன்
9. கேது                                           கேது                                                     ராகு
10. யுரேனஸ்                              சுக்கிரன்                                                குரு
1) இலக்கின பாவத்தின் உபநட்சத்திராபதி செவ்வாய், 9-ம் பாவத்தில் இருந்து 12-ம் பாவத்தை பார்வையிடுவதும். இலக்கினாதிபதி சனியாகி 9,12-ம் பாவத்தை பார்வையிடுவது சிறந்த ஜோதிடருக்கான விதிகளாகும்.
2) 2-ம் பாவத்தின் உபநட்சத்திராதிபதி புதன் ஜோதிடத்திற்கு காரகன். இதனால் விநாயகரின் அருளாசி பெற்ற பெரியவர், வாக்கு ஸித்தி பெற்றவர்கள்.
3) 9-ம் பாவத்தின் உபநட்சத்திராதிபதி புதன்.
4) 3-ம் இடம் புத்தகம் வெளியிடும் திறமையைக் குறிக்கும் பாவம்.
5) 3ம் பாவத்தின் உபநட்சத்திராதிபதி புதன் 6, 9க்கதிபதி, 9-ல் இருப்பதால் பல ஜோதிட நூல்களை எழுதும் திறமையும் தந்தது.

நன்றி :
ஜோதிடப் பேராசிரியர் திரு. S.P.சுப்பிரமணியன், L.C.E, Retd., J.E, பழனிகோயில் தெரு, நெற்குப்பை – 630405 மொபைல் : 94433-45484, 89407-60309
Ref : கிருஷ்ணமூர்த்தி ஜோதிட பத்ததி யோக விளக்கம்
ஆசிரியர் : ஜோதிடப் பேராசிரியர் எஸ்.பி.சுப்பிரமணியன்
பதிப்பகம் : நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு,
(தி.நகர் தலைமை அஞ்சலகத்தை ஒட்டிய தெரு)
பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை – 17
தொடர்புக்கு : 044-24334397
மொபைல் : 98402-26661, 98409-32566, 99400-45044

பெண்ணுக்குத் திருமணம் செய்ய 

உகந்த நட்சத்திரம்






பொதுவாக பெண்குழந்தைகளைப் பெற்றவர்கள் தங்கள் பெண் நல்லபடி வாழவேண்டும் என்று கவலைப்படுவார்கள், கடவுளை வேண்டிக்கொள்வார்கள்.  ஆணோ அல்லது பெண்ணோ ஒருவருடைய திருமண  நாளைக் குறிக்க பலவிதிகள் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால்  நடைமுறையில் திருமண மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு நாள் குறிக்கும் நிலை தோன்றிவிட்டது. இது சரியல்ல. திருமண வாழ்வில் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொன்னால் மிகையாகாது. எந்த சுப செயலுக்குமே தொடக்கம் செய்யும் நாள் மிக முக்கியம். தான் பெற்ற மகளுக்கு திருமணத்தைக் குறிக்க சுலபமான அதே சமயம் மிகச் சிறந்த ஒரு நாள் சுவாதி நட்சத்திரம் என்று யஜூர் வேதத்தில் முதல் அஷ்டகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

காரணம் சுவாதி நட்சத்திர நாளில் திருமணம் செய்துகொள்ளும் பெண் தன கணவருடன் மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் அதிக நெருக்கம் கொண்டவளாகவும் விளங்குவாள் என்று வேதம் சொல்கிறது. கணவன் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு தாய் வீட்டுக்கு மகள் திரும்பி வரமாட்டாள். வந்தால் சந்தோஷமாக கணவனோடு வந்து கணவனோடு செல்வாள். கணவனைப் பிரியாமல் இருப்பாள் என்று சொல்லப்பட்டுள்ளது. சுவாதி நட்சத்திரம் வளர்பிறை நாளில் நல்ல சுப திதியோடு சேர்ந்து வந்தால் திருமணம் செய்ய அது மிகவும் சிறப்பான நாள்.

ஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் 

யோக நட்சத்திர நாள் எது ?



பஞ்சாங்கம் என்ற ஐந்து அங்கங்களில் யோகம் என்ற வடமொழி சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள்படும். இதில் சில வகைகள் உண்டு. சூரியன் மற்றும் சந்திரன் செல்லும் தூரங்களை சேர்த்துப் பார்ப்பது ஒரு யோகம். இது ஒருவரின் பிறந்தநாளின் அடிப்படையில் 27 வகைப்படும். இது ஒவ்வொருவரது ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றை வைத்து ஒருவருக்கு எந்த நட்சத்திரம் மிகவும் நன்மை தரும். எந்த நட்சத்திரம் தீமை தரும் என்று அறியலாம்.   கீழே கண்ட யோகங்களில் பிறந்தவர்கள் அதற்கு நேராக உள்ள யோக நட்சத்திரத்தில் செய்யும் காரியங்கள் வெற்றி அடையும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட யோகத்தில் பிறந்தவர்களுடன் நட்புடன் இருப்பார்கள். ஆனால் அதற்கு அடுத்துள்ள அவயோக நட்சத்திரத்தில் செய்யும் காரியங்கள் தோல்வியில் முடியும் அல்லது பிரச்சினையில் சிக்கும். அவயோக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடன் பழகுவதில் கவனம் தேவை. 

யோகம் யோக நட்சத்திரம் அவயோக நட்சத்திரம் 
விஷ்கம்பம் பூசம் திருவோணம் 
பிரீதிஆயில்யம் அவிட்டம் 
ஆயுஷ்மான்மகம் சதயம் 
சௌபாக்கியம் பூரம் பூரட்டாதி 
சோபனம் உத்திரம்   உத்திரட்டாதி 
அதிகண்டம்ஹஸ்தம் ரேவதி 
சுகர்மம்சித்திரை அஸ்வினி 
திருதிசுவாதிபரணி 
சூலம்விசாகம் கிருத்திகை 
கண்டம்அனுஷம் ரோகிணி
 விருத்திகேட்டை மிருகசீரிஷம் 
துருவம்மூலம் திருவாதிரை 
 வியாகதம்  பூராடம் புனர்பூசம் 
ஹர்ஷனம் உத்திராடம்  பூசம் 
வஜ்ரம்திருவோணம் ஆயில்யம் 
சித்திஅவிட்டம் மகம் 
 வியதீபாதம் சதயம்  பூரம் 
வரியான்பூரட்டாதி  உத்திரம்   
பரிகம்உத்திரட்டாதி ஹஸ்தம் 
சிவம்ரேவதி சித்திரை 
சித்தம்அஸ்வினி சுவாதி
சாத்தியன்பரணி விசாகம் 
சுபம்கிருத்திகை அனுஷம் 
சுப்பிரம்ரோகிணிகேட்டை 
பராமயம்மிருகசீரிஷம் மூலம் 
ஐந்திரம்திருவாதிரை  பூராடம் 
வைதிருதிபுனர்பூசம்  உத்திராடம் 

ஒவ்வொரு கிழமையும் வெவ்வேறு நட்சத்திரங்களுடன் சேர்வதால் வருவது ஒரு யோகம். இவை அமிர்தாதி யோகங்கள் ஆகும். ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்வதால் ஏற்படுவதும் யோகம் என்று சொல்லப்படும். இவற்றில் பலவகையான யோகங்கள் உண்டு. கிரகங்கள் சேர்க்கையால் ஏற்படும் யோகத்தின் தன்மையால் நன்மையோ தீமையோ ஏற்படும்.