ஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும்
யோக நட்சத்திர நாள் எது ?
பஞ்சாங்கம் என்ற ஐந்து அங்கங்களில் யோகம் என்ற வடமொழி சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள்படும். இதில் சில வகைகள் உண்டு. சூரியன் மற்றும் சந்திரன் செல்லும் தூரங்களை சேர்த்துப் பார்ப்பது ஒரு யோகம். இது ஒருவரின் பிறந்தநாளின் அடிப்படையில் 27 வகைப்படும். இது ஒவ்வொருவரது ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றை வைத்து ஒருவருக்கு எந்த நட்சத்திரம் மிகவும் நன்மை தரும். எந்த நட்சத்திரம் தீமை தரும் என்று அறியலாம். கீழே கண்ட யோகங்களில் பிறந்தவர்கள் அதற்கு நேராக உள்ள யோக நட்சத்திரத்தில் செய்யும் காரியங்கள் வெற்றி அடையும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட யோகத்தில் பிறந்தவர்களுடன் நட்புடன் இருப்பார்கள். ஆனால் அதற்கு அடுத்துள்ள அவயோக நட்சத்திரத்தில் செய்யும் காரியங்கள் தோல்வியில் முடியும் அல்லது பிரச்சினையில் சிக்கும். அவயோக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடன் பழகுவதில் கவனம் தேவை.
யோகம் | யோக நட்சத்திரம் | அவயோக நட்சத்திரம் |
விஷ்கம்பம் | பூசம் | திருவோணம் |
பிரீதி | ஆயில்யம் | அவிட்டம் |
ஆயுஷ்மான் | மகம் | சதயம் |
சௌபாக்கியம் | பூரம் | பூரட்டாதி |
சோபனம் | உத்திரம் | உத்திரட்டாதி |
அதிகண்டம் | ஹஸ்தம் | ரேவதி |
சுகர்மம் | சித்திரை | அஸ்வினி |
திருதி | சுவாதி | பரணி |
சூலம் | விசாகம் | கிருத்திகை |
கண்டம் | அனுஷம் | ரோகிணி |
விருத்தி | கேட்டை | மிருகசீரிஷம் |
துருவம் | மூலம் | திருவாதிரை |
வியாகதம் | பூராடம் | புனர்பூசம் |
ஹர்ஷனம் | உத்திராடம் | பூசம் |
வஜ்ரம் | திருவோணம் | ஆயில்யம் |
சித்தி | அவிட்டம் | மகம் |
வியதீபாதம் | சதயம் | பூரம் |
வரியான் | பூரட்டாதி | உத்திரம் |
பரிகம் | உத்திரட்டாதி | ஹஸ்தம் |
சிவம் | ரேவதி | சித்திரை |
சித்தம் | அஸ்வினி | சுவாதி |
சாத்தியன் | பரணி | விசாகம் |
சுபம் | கிருத்திகை | அனுஷம் |
சுப்பிரம் | ரோகிணி | கேட்டை |
பராமயம் | மிருகசீரிஷம் | மூலம் |
ஐந்திரம் | திருவாதிரை | பூராடம் |
வைதிருதி | புனர்பூசம் | உத்திராடம் |
ஒவ்வொரு கிழமையும் வெவ்வேறு நட்சத்திரங்களுடன் சேர்வதால் வருவது ஒரு யோகம். இவை அமிர்தாதி யோகங்கள் ஆகும். ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்வதால் ஏற்படுவதும் யோகம் என்று சொல்லப்படும். இவற்றில் பலவகையான யோகங்கள் உண்டு. கிரகங்கள் சேர்க்கையால் ஏற்படும் யோகத்தின் தன்மையால் நன்மையோ தீமையோ ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக