Vedic Jothidam

வெள்ளி, 29 ஜூலை, 2016

நற் தேவதைகள் வீட்டில் குடியேற..

தினசரி புதினா இலைகள் சிலவற்றில்  ஊற வைத்த நீரால் வாசல் தெளித்து கோலமிட்டு வர, எதிர் மறை சக்திகள் அவ்விடத்தை விட்டு அகன்று, நற் தேவதைகள் வீடு தேடி வரும்.

பண முடக்கம் அகல

திடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர் தெளித்து பின் பைரவர் அல்லது உக்ர காளியை தொடர்ந்து 8 வாரங்கள் மாலை 6:30-7 மணியளவில் அர்ச்சித்து பூஜித்து வர மேற்கண்ட துன்பங்கள் நீங்கும். கோவிலுக்கு செல்ல முடியாதோர், படத்தை வைத்து தனி தீபமாக மண் அகலில் நல்லெண்ணெய், நீல நிற திரி கொண்டு ஏற்றி பூஜித்து வரலாம்.


நல்ல வேலை, உயர் பதவி கிடைக்க மற்றும் தொழில் சிறக்க

புதன் கிழமை தோறும் வீட்டில் மதியம் 12-1:30 மணி வரை எரியுமாறு மண் அகலில் நல்லெண்ணெய் தீபம் பச்சை திரி கொண்டு துர்கை படத்தை வைத்து பரிகார தீபமாக ஏற்றி வழிபட்டு வர, மேற்கண்ட தேவைகள் நிறைவேறும்.. தேவைகள் நிறைவேறும் வரை செய்து வரலாம். குறிப்பிட்ட நபருக்காக வேண்டுதல் வைத்து வீட்டிலுள்ள எவரும் செய்யலாம். 


திருமலை-திருப்பதியில் சேவை செய்ய விருப்பமா?

நீங்கள் கடக ராசியில் பிறந்தவராக இருந்தாலோ, அல்லது உங்களுக்கு சந்திர தசை நடந்து கொண்டிருந்தாலோ, நீங்கள் ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் - நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலோ - நீங்கள் ஒரு முறை திருப்பதி சென்று Volunteer சேவை செய்து வந்தால் உங்களுக்கு - மிக அற்புதமான பலன்கள் கிடைக்கும். சேவை செய்யும் போது - இடையில் பௌர்ணமி தினம் வந்தால் , இன்னும் விசேஷம்.
செல்வத்தின் அதிபதி ஸ்ரீவெங்கடாஜலபதியின் இருப்பிடம் திருப்பதி.அங்கு குறைந்த பட்சம் திங்கள் முதல் ஞாயிறு வரை தங்கி பக்தர்களுக்கு சேவை செய்ய விருப்பமா? ஒரு நாளுக்கு குறைந்தது 6 மணி நேரம் சேவையில் ஈடுபட வேண்டும்.மேலும் சனிக்கிழமையன்று சேவையில் ஈடுபடுவோருக்கு சிறப்பு தரிசனம் உண்டு.
ஸ்ரீவாரி சேவா உறுப்பினராகுங்கள்.சரி! எப்படி உறுப்பினராவது?
குறைந்தது 10 பேர் கொண்ட குழுவை பின்வரும் முகவரிகளில் ஏதாவது ஒன்றில் பதிய வேண்டும்.அப்படிப் பதிந்தால் திருப்பதியில் நாம் விரும்பும் ஏதாவது 10 நாளுக்கு சேவை செய்யச் செல்லலாம்.இதற்கு கட்டணம் கிடையாது.திருப்பதியில் சாப்பாடு,தங்குமிடம் இலவசம்.அதுவும் தேவஸ்தான ஊழியராக அந்த 10 நாட்களில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.நீங்கள் சேவா ஊழியர் என்பதற்கு அடையாளமாக கழுத்தில் காவித் துண்டு அணிந்திருப்பீர்கள்.
ஸ்ரீவாரி சேவா:திரு.கண்ணபிரான் 94431-36763.0431-27822887.
ஸ்ரீவாரி சேவா அமைப்பு:திரு.ஏ.பி.நாகராஜன்
திருப்பதி தேவஸ்தான கோவில்,
வெங்கட்நாராயணா சாலை,தி.நகர்,சென்னை-17.
044-24343535.
ஆங்கில மாதத்தின் முதல் சனி மதியம் 2 முதல் 4 மணிக்கு இங்கு வருக!
ஏ.பி.என். குரூப்
புதிய எண்:16,டி.டி.கே.சாலை,
முதல் கிராஸ் தெரு,ஆழ்வார்பேட்டை,சென்னை-18.
044-24334700,24331776.
சேவா சதர்ன் ஹால்,மேல்திருப்பதியில் பஸ் நிலையம் அருகில் உள்ளது.இங்கும் தொடர்பு கொள்ளலாம்.
PUBLIC RELATION OFFICER,
THIRUMALA THIRUPATHI DEVASTHANAM,
KABILA THEERATHAM ROAD, THIRUPATHI.
0877-226456.
திரு.வி.எஸ்.சுந்தரவரதன் 044-22232526,9444221661.

சூரியனின் ஆதிக்க சக்தி கொண்ட குங்குமப்பூவை சிறிது நீரில் குழைத்து தினசரி நெற்றியில் திலகமாக இட்டு செல்ல, மேற்கண்ட நிலை மாறி அனைத்திலும் வெற்றி உண்டாகும்.



18 வகை மூலிகை சாம்பிராணி தயாரிக்கத் தேவையான பொருட்கள்

மூலிகை தூப பொடி

1.சாம்பிராணி
2.விலாமிச்சை வேர்
3.தும்பை
4.தேவதாறு
5.அருகம்புல்
6.குங்கிலியம்                       
7.வேப்ப இலை
8.நொச்சி இலை
9.வில்வ இலை
10.வெண்கடுகு
11.கருங்காலி 
12.நன்னாரி
13.வெட்டிவேர்
14.நாய்க்கடுகு                                        
15.ஆலங்குச்சி
16.அரசங்குச்சி
17.நாவல் குச்சி
18.மருதாணி விதை



திங்கள், 25 ஜூலை, 2016

தோஷமும் பரிகாரங்களும்:
செவ்வாய் தோஷம்:
செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.
ராகு-கேது தோஷம்:
திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கலாம்.
சூரிய தோஷம்:
ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளிக்கலாம். தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார்கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
களத்திர தோஷம்:
சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் பிட், தேங்காய், பூ, பழம், தாலி கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெறலாம்.

ஜாதக அமைப்புகளை சீர்தூக்கி பார்த்து தகுந்த ஜாதகத்தை சேர்ப்பதன் மூலமாகவும் எளிய பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
ஜாதக தோஷங்கள் என்ன?

பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன. அவை ராகு/கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் ஆகும்.

செவ்வாய் தோஷம்: 
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.


ராகு - கேது தோஷம்: 
லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.


மாங்கல்ய தோஷம்: 
இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.


சூரிய தோஷம்: 
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.


களத்திர தோஷம்: 
களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும்.
மேற்சொன்ன அமைப்புள்ள தோஷ ஜாதகங்களுடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். மேலும் சில எளிய பரிகாரங்கள் செய்வதால் தடைகள், இடையூறுகள் விலகும்.


செவ்வாய் தோஷம்: 
செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.


ராகு-கேது தோஷம்: 
திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கலாம்.


சூரிய தோஷம்: 
ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளிக்கலாம். தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார்கோவிலுக்கு சென்று வழிபடலாம்.


களத்திர தோஷம்: 
சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் பிட், தேங்காய், பூ, பழம், தாலி கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெறலாம்.
ஜாதக அமைப்புகளை சீர்தூக்கி பார்த்து தகுந்த ஜாதகத்தை சேர்ப்பதன் மூலமாகவும் எளிய பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

மாங்கல்ய தோஷம்

ஜாதகங்களில் திருமணமே ஆகாது என்ற அமைப்புடைய ஜாதகங்கள் உள்ளன.  ஆனால் மாங்கல்ய தோஷம் என்பது அவ்வாறு இல்லை, இந்த தோஷம் நிரந்தரமாக திருமணத்தை தடை செய்துவிடாது.

ஒரு பெண்ணின் ஜனன ஜாதகத்தில் 8ம் வீடு மாங்கல்ய ஸ்தானமாகும். 8ம் வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், 8ல் சுபகிரகங்கள் அமையப் பெற்றாலும், 8ம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்தாலும் நீண்ட மாங்கல்ய பாக்கியம் உண்டாகி, கணவரின் ஆயுளை அதிகரிக்கச் செய்யும். ஒரு ஆணுக்கு ஆயுள் பாவம் பலமிழந்திருந்தால் மாங்கல்ய பலம் கொண்ட பெண்ணை திருமணம் செய்து வைப்பது நல்லது.

அதுவே பெண் ஜாதகத்தில் 8ம் வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும், சனி, செவ்வாய் போன்ற பாவிகள் பார்வை செய்தாலும் கடுமையான மாங்கல்ய தோஷம் உண்டாகும். இதனால் இளம் வயதிலேயே வாழ்க்கை துணையை இழக்கக் கூடிய அவலநிலை ஏற்படும். இப்படி மாங்கல்ய பாவம் பலமிழந்த பெண்ணிற்கு நல்ல ஆயுள் பலம் கொண்ட வரனாக பார்த்து திருமணம் செய்து வைத்தால்தான் தீர்க்க சுமங்கலியாக வாழக்கூடிய பாக்கியம் உண்டாகும். எனவே, பொருத்தம் பார்க்கும் போது 8ம் வீட்டையும் இருவரின் ஜாதக ரீதியாக பாப / தோஷ சாம்ய விதிமுறைப்படி பொருத்த நிர்ணயம் செய்யும் ஜோதிடர் மூலம் ஆராய்ந்து பார்ப்பது மிகுந்த பயனளிக்கும்.

எட்டாமிடத்தில் தோஷமுடைய செவ்வாய் பகவானை பிரஹஸ்பதி (குரு பகவான்) பார்க்க இந்த தோஷம் நீங்கி விடும் என்பது ஜோதிட விதிகளில் கூறப்படுகிறது.


மாங்கல்ய தோஷம் நீங்க வயதான சுமங்கலிகளுக்கு முருகன் சன்னிதியில் மஞ்சள் குங்குமம் வெற்றிலை பாக்கு கண்ணாடி சீப்பு மற்றும் தங்கள் தகுதிக்கேற்ப தட்சணை ஆகியவற்றை கொடுத்து அவர்களை வீட்டிற்கு அழைத்து உணவளித்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிட தோஷம் தீரும் என்று ப்ருகு நந்தி நாடி என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.





புதன் தசை - புதன் புக்தி பாதிப்புகள் அகல :
ஒருவருக்கு புதன் தசை புதன் புக்தி நடக்கும் போது அவர்களது ஜாதகத்தில் புதன் தீய ஆதிபத்யம் பெற்றோ அல்லது நலிவடைந்தோ இருந்தால் அவர்களது பொருளாதாரம் பாதிக்கப்படலாம். அப்படிப்பட்ட ஜாதக அமைப்பினை கொண்டவர்கள் கருப்பு சிவப்பு குண்டுமணியுடன் 6 மஹாலெட்சுமி வெள்ளிக் காசுகளை கலந்து ஒரு சிறு பாத்திரத்தில் வைத்துக் கொண்டு பூஜை அறையில் தெய்வ வழிபாட்டை முடித்த பின் தினமும் இரண்டு கைகளாலும் அந்த குண்டுமணியையும் வெள்ளிக் காசுகளையும் சேர்த்துக் கலந்து கைகளை கண்களில் ஒற்றிக் கொள்ள பொருளாதார சிக்கலில் இருந்து சற்று விடுபடலாம்.



ஞாயிறு, 24 ஜூலை, 2016



செவ்வாய் தோஷம்

லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும். அப்படி மீறி திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவ்வாய் தசை  நடைபெற்றால்  அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என ஜோதிட விதிகள் கூறுகின்றது.





ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என ஜோதிட விதிகள் கூறுகின்றது.

2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது.

இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன.

மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குன்றும்.

குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

சூரியன், சந்திரன், குரு, சனி, ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என சோதிடம் கூறுகிறது.

சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

2 - இடம் மிதுனம், அல்லது கன்னி ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும். 

4 - ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

7 - ம் இடம் கடகம், மகரம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

8 - ம் இடம் தனுசு, மீனம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

ஆதாரம் : கிரஹ சஞ்சார பலன்கள்,
ஆசிரியர் : திரு. N. தம்மண்ண செட்டியார் அவர்கள்.
புனர்பூ தோஷம்
திருமண தோஷங்களில் சற்று கடுமையான தோஷம் இந்த புனர்பூ தோஷம் ஆகும் இது திருமண திடீர் தடை, திருமண தாமதம், திருமணத்திற்கு முன்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும் தோஷம், வரன் தேடி வருவதற்குக் கூட தாமத படுத்தும், நல்ல வரன்கள் அமைந்தாலும் தட்டிகழிக்க வைக்கும், மிக கடுமையாக இருந்தால் ப்ரம்மச்சரிய வாழ்க்கையை கூட வாழ வைத்துவிடும்.
இப்பேர்பட்ட தோஷம் எப்படி ஏற்படுகிறது சனி பகவானும், சந்திர பகவானும் ஒன்றாக சேர்ந்து இருந்தால் அல்லது சனியின் சமசப்தமமாக அதாவது சனிக்கு 7 ஆம் வீட்டில்சந்திரன் இருந்தால் அல்லது சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரதில் சந்திரன் இருந்து, சந்திரனின் நட்சத்திரமான ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரதில் சனி இருந்தால் புனர்பூ தோஷம் ஏற்படும்.
சனியோ சந்திரனோ யாரோ ஒருவர் மற்றவரின் நட்சத்திரத்தில் இருந்தாலும், நவாம்சத்தில் சனி பகவானும், சந்திர பகவானும் ஒன்றாக சேர்ந்து இருந்தாலும் பாதி அளவிலான புனர்பூ தோஷத்தை ஏற்படுத்தும்.
இதன் பலன் மேலே சொன்னது போல வேதகால ஜோதிடம் சொல்லி உள்ளது, தற்காலத்தில் நிச்சயதார்த்துக்கு பின் திருமணம் நின்றுவிடுதல், விவகாரத்து, மறுமணம், திருமணத்திற்கு முன்பான உடல் உறவு காரணமான பிரச்சினைகளால் தடை, திருமணம் செய்துவைப்பதற்கு கூட ஆள் இல்லாமல் தவித்தல் இது போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும் வலிமை பெற்றது இந்த புனர்பூ தோஷம்.

விதிவிலக்கு சுப பலமான குரு பகவான் பார்வை சனி, சந்திரனுக்கு கிடைக்க வேண்டும் அப்படி கிடைத்தால் புனர்பூ தோஷம் பெரிய அளவில் குறையும், சில ஜாதகங்களில் சனி, சந்திரனுடன் குரு, சுக்கிரன் சேர்க்கை கூட சற்று இந்த தோஷத்தை கட்டுப்படுத்துகிறது.

ஆதாரம் : கிரஹ சஞ்சார பலன்கள், ஆசரியர் : N.தம்மண்ண செட்டியார்

                                                                உதாரண ஜாதகம்






வாராஹி பாமாலை
1. வசீகரணம் (தியானம்)

இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.

2.
காட்சி (யந்த்ர ஆவாஹனம்)

தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ்இட்டு ரீங்காரம் உள்ளிட் டதுநடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.

3.
பகை தடுப்பு (பிரதாபம்)

மெய்ச்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப்
பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே.

4.
மயக்கு (தண்டினி தியானம்)

படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.


5.
வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்)

நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித்திட்டிடும் பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்
தொடும்கார் மனோன்மணி வாராஹிநீலி தொழில் இதுவே.


6. உச்சாடணம் (ரோகஹரம்)

வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே.

7.
எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)

நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே.

8.
பெரு வச்யம் (திரிகாலஞானம்)

வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.

9.
பகை முடிப்பு (வித்வேஷணம்)

வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம்எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.

10.
வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்)

பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே.

11.
தேவி வருகை (பூதபந்தனம்)

எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.

12.
ஆத்மபூஜை (மஹாமாரி பஜனம்)

சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே

13.
தேவிதாபனம் (பில்லி மாரணம்)

நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.

14. மந்திரபூஜை (முனிமாரணம்)

மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த் தெய்வமே.

15.
வாராஹி அமர்தல் (மூர்த்தி தியானம்)

ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே

16.
வரம் பொழிதல் (எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

17. வாழ்த்துதல் (உலக மாரணம்)
வருந்துணை என்று வாராஹிஎன்றன்னையை வாழ்த்திநிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.


18. நன்னீர் வழங்கல் (ஏவல் பந்தனம்)

வேறாக்கும் நெஞ்சும் வினையும்வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.

19.
புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)

பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள்எங்கள் அம்பிகையே.

20.
மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)

தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.

21.
தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)

ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர்<<உடலும்
கூராகும் வாளுக் கிரைஇடுவாள்கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடிஇருந்தாள்என்னை வாழ்விக்கவே.

22.
தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)

தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே

23. புகழ்சொற்பாமாலை (மௌனானந்த யோகம்)
ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு
யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல்ஆழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉ<ண்டே.

24.
படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)

உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.

25.
பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)

தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.

26.
படைநேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்)

அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே.

27.
அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)

சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே
அந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே.

28.
திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)

பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக் குவால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே.

29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட்டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட்டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு
கூறிட்டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.

30.
சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)

நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடியார்க்கு முன்னே
ஸரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும்தெய்வமே.

31.
நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)

வீற்றிருப்பாள் நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள் கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளேஎன்னை ஆளும் குலதெய்வமே.

32.
நிறைமங்கலம் (சிவஞான யோகம்)

சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம்ஆரும் மெய்யன்பர்க்கே இடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே