Vedic Jothidam

ஞாயிறு, 24 ஜூலை, 2016

சனி பகவானின் மற்றொரு சிறப்பு !
71/2 ஆண்டு காலத்தில் ஒவ்வொரு ராசிக்கும் சனி பகவான் பிரவேக்கும் போதும் சனி பகவான் எந்த வாகனத்தில் வருகிறார் என்கிற கணக்கும் நூல்களில் சொல்லப்பட்டு இருக்கிறது .அதை பொறுத்து ஒவ்வொரு ஜாதகருக்கும் அதற்கு ஏற்ற படி நன்மையோ தீமையோ நடக்கும்.
அதை நாம் எப்படி தெரிந்து கொள்வது :-
சனி பெயர்ச்சியின் போது அந்த நாளில் அன்றைய நட்சத்திரத்தை குறித்து வைத்துக் கொண்டு இதை ஜாதகரின் ஜன்ம நட்சத்திரம் முதல் எண்ணி வரும் தொகையில் 9 ஆல் வகுத்த மீதி எண் என்னவோ அதன் படி.
எண் வாகனம் பலன்
1 கழுதை கெடுதி செய்வார்
2 குதிரை வெற்றியை கொடுப்பார்
3 யானை சௌகரியத்தை கொடுப்பார்
4 எருமை மத்திம பலனை கொடுப்பார்
5 சிங்கம் சத்ரு நாசத்தை ஏற்படுத்துவார்
6 நரி சோகத்தை உண்டு பண்ணுவார்
7 காகம் கலகம் மனக்கவலை கொடுப்பார்
8 மயில் லாபத்தை உண்டு பண்ணுவார்
9 அன்னம் சுகத்தை கொடுப்பார்
இதை அறிந்து கணக்கிட்டு 71/2 சனி நடக்கும் காலத்தில் பலன் அறிய வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக