Vedic Jothidam

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

பெண்ணுக்குத் திருமணம் செய்ய 

உகந்த நட்சத்திரம்






பொதுவாக பெண்குழந்தைகளைப் பெற்றவர்கள் தங்கள் பெண் நல்லபடி வாழவேண்டும் என்று கவலைப்படுவார்கள், கடவுளை வேண்டிக்கொள்வார்கள்.  ஆணோ அல்லது பெண்ணோ ஒருவருடைய திருமண  நாளைக் குறிக்க பலவிதிகள் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால்  நடைமுறையில் திருமண மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு நாள் குறிக்கும் நிலை தோன்றிவிட்டது. இது சரியல்ல. திருமண வாழ்வில் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொன்னால் மிகையாகாது. எந்த சுப செயலுக்குமே தொடக்கம் செய்யும் நாள் மிக முக்கியம். தான் பெற்ற மகளுக்கு திருமணத்தைக் குறிக்க சுலபமான அதே சமயம் மிகச் சிறந்த ஒரு நாள் சுவாதி நட்சத்திரம் என்று யஜூர் வேதத்தில் முதல் அஷ்டகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

காரணம் சுவாதி நட்சத்திர நாளில் திருமணம் செய்துகொள்ளும் பெண் தன கணவருடன் மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் அதிக நெருக்கம் கொண்டவளாகவும் விளங்குவாள் என்று வேதம் சொல்கிறது. கணவன் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு தாய் வீட்டுக்கு மகள் திரும்பி வரமாட்டாள். வந்தால் சந்தோஷமாக கணவனோடு வந்து கணவனோடு செல்வாள். கணவனைப் பிரியாமல் இருப்பாள் என்று சொல்லப்பட்டுள்ளது. சுவாதி நட்சத்திரம் வளர்பிறை நாளில் நல்ல சுப திதியோடு சேர்ந்து வந்தால் திருமணம் செய்ய அது மிகவும் சிறப்பான நாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக