Vedic Jothidam
!->
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016
கோள்களும்,நோய்களும்
இதய நோய்கள், கண் நோய்கள், முதுகு வலி, முதுகெலும்பு தண்டு வடத்தில்
பிரச்னைகள், ரத்த அழுத்தம்.
ஜல தோஷம், சளி, இருமல் பிரச்னைகள், வாயுத் தொந்தரவு, வயிறு சம்பந்தப்பட்ட
உபாதைகள், மன நோய்கள், ஆஸ்துமா, மார்புச் சளிநோய்.
உஷ்ண உபாதைகள், ஜுரம், தீக்காயங்கள், வெந்த புண்கள், வெட்டுக் காயங்கள், கொப்புளங்கள், தலைவலி, மண்டையில் ரத்தக்கட்டு, விபத்துகளினால் உண்டாகும்
காயங்கள், கண்கள் பொங்குதல், தூக்கமின்மை.
நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, வலிப்பு நோய்கள், கிறுகிறுப்பு, தலைச்சுற்றல், தலைவலி, நரம்பு சம்பந்தப்பட்ட
நோய்கள், ஞாபக மறதி, உணர்ச்சியற்றுப்போதல், மரத்துப்போதல்.
கல்லீரல் நோய்கள், நீர்கோத்துக் கொள்வதால் உண்டாகும் மார்பு வலி, சர்க்கரை நோய், முறையற்ற உணவுப் பழக்கத்தால்
உண்டாகும் நோய்கள், இடுப்புப் பிடிப்பு, தலை கிறுகிறுப்பு, கொழுப்பு, உடல் பருமனால் உண்டாகும்
நோய்கள்.
கழுத்து வலி, சர்க்கரை நோய், பால்வினை நோய்கள், பெண்களுக்கான நோய்கள், தோல் நோய்கள், கெட்ட சுவாசம், சிறுநீரக நோய்கள், இதயப் படபடப்பு, சொறி, சிரங்கு, தொண்டைச்சதையில் வீக்கம், தொண்டைப் புண், பார்வையில் கோளாறு.
மூட்டு வலி, பல் வலி, எலும்பு மஜ்ஜைகளில் உண்டாகும் தொந்தரவுகள், செவிட்டுத் தன்மை, குரலிழப்பு, வாத நோய்கள், மந்தத்தன்மை, எலும்புருக்கி, தோல் நோய்கள்.
தொற்று நோய்க் கிருமிகளால் உண்டாகும் கொடிய நோய்கள், தொழு நோய், மன அழுத்தத்தினால் உண்டாகும்
ஹிஸ்டீரியா போன்ற நோய்கள், இன்னும் பலவிதமான நோய்களைத் தூண்டும் வினை ஊக்கி.
இளம்பிள்ளை வாதம், வெண் குஷ்டம், தோல் நோய்கள், பொதுமக்களிடம் மொத்தமாகப்
பரவும் சீசன் நோய்கள், கோமாநிலை.
எந்த லக்னத்திற்க்கு என்ன
நோய்கள்?
1. மேஷலக்னத்திற்க்கு அஜீரணம்
அடிக்கடி வரும். இது நிரந்தரமாக இருக்காது.
2. ரிஷப லக்னம் இவர்களுக்கு அடி
வயிற்றில் பிரச்சனைகள் வரும் அது நாளுக்கு நாள் வளர்ச்சி அடையும்.
3. மிதுன லக்னம் இவர்களுக்கு
மர்ம உறுப்பில் பிரச்சனைகள் வரும். அது நிரந்தரமாக இருக்கும்.
4. கடக லக்னம் இவர்களுக்கு
மூலம் வர்க்க சம்பந்தமான நோய் வரும்.இரத்தம் சிலநாட்கள் வரும், பின் நின்றுவிடும். ஆனால்
அறுவை சிகிச்சை மூலம் தான் குணமாகும்.
5. சிம்ம லக்னம் இவர்களுக்கு
இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி முதல் தொடை வரை வலி வேதனைகள் வரும்.
6. கன்னி லக்னம் இவர்களுக்கு
கால்மூட்டு எலும்பு முதல் கால்பாததிற்க்கு மேல் வலி வேதனைகள் வரும்
7. துலா லக்னம் இவர்களுக்கு
ரகசிய நோய்கள், கால் பாதம் இவற்றில் வலி வேதனைகள் வரும்.
8.விருச்சிக லக்னம்
இவர்களுக்கு தலைவலி, போன்றவைகள் வரும் இது நாளுக்கு நாள் அதிகமாகும்.
9 தனுசு லக்னம் இவர்களுக்கு
சர்க்கரை நோய், பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும். இது ஓரே நிலையானதாக
இருக்கும்.
10 மகர லக்னம் உள்ளவர்களுக்கு
நரம்பு சம்பந்தமான, உணர்வு புலன்களில் பிரச்சினைகள் வரும்.
11 கும்ப லக்னம் உள்ளவர்களுக்கு
பொதுவாக நீர் சம்பந்தமான, சளி,இருதய துடிப்பு,நுரையீரல், ஆகியவற்றில் பிரச்சனைகள்
வரும். இவர்கள் இளமை முதல் முதுமை வரை மருத்துவர் ஆலோசனை பெறுவது நலம்.
12 மீன லக்னம் உள்ளவர்களுக்கு
உஷ்ணம் சம்பந்தமான நோய்கள், கர்ப்பப்பை நோய்கள் வரும்.
சிம்மத்தில் கேது இருந்து
கேது சாரத்தில் இருந்தால் ஆண்களுக்கு வயிற்றில் கேன்சர் பெண்களுக்கு கருப்பையில்
கேன்சர் வரும்.
இது காலதேவன் இட்டவிதி்.மற்றபடி மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை பொறுத்து பலன்கள் வேறுபடலாம்.
பெரும்பாலானோருக்கு
இது பொருந்தும்.
திங்கள், 8 ஆகஸ்ட், 2016
ஜாதக யோகங்கள்
தர்மகர்மாதிபதி யோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் 9 ஆம் அதிபதியும் 10 ஆம் அதிபதியும் ஒரே வீட்டில்
இணைந்து காணப்படுவது தர்மகர்மாதிபதி யோகம். பரிவர்த்தனை யோகம் - எதாவது இரண்டு கிரகம் தத்தம் வீடுகளில் இருந்து மாறி இருக்கும் அமைப்பாகும்.உதாரணமாக : குரு வீட்டில் செவ்வாயும் செவ்வாய் வீட்டில் குருவும் பரிவர்த்தனையாகி காணப்படுவது பரிவர்த்தனை யோகம்.
கஜகேசரி யோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் இருந்த வீட்டிற்கு 4,7,10 ஆம் வீட்டில் குரு இருந்தால் கஜகேசரி யோகம்.
குரு சந்திர யோகம் - சந்திரனுக்கு 1 , 5 , 9 இல் குரு இருந்தால் குரு சந்திர யோகமாகும்.
சுனபா யோகம் - சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ , அந்த வீட்டிற்கு இரண்டாம் வீட்டில் சுக்கிரன் , குரு , புதன் போன்ற கிரகங்கள் இருந்தால் சுனபா யோகமாகும்.
அனபா யோகம் - சந்திரனுக்கு 12 ஆம் வீட்டில் சுக்கிரன் , குரு புதன் போன்ற கிரகங்கள் இருந்தால் அனபா யோகமாகும்.
சந்திரமங்கள யோகம் - சந்திரனுக்கு 1 , 4 , 7 , 10 இல் செவ்வாய் அமையபெற்றால் சந்திரமங்கள யோகமாகும்.
சதுஷ்ர யோகம் - 1 , 4 , 7 , 10 இல் கிரகங்கள் இருந்தால் சதுஷ்ர யோகமாகும்.
அமல யோகம் - சந்திரனுக்கு 10 இல் சுபகிரகம் இருந்தால் அமல யோகமாகும்.
சுபவாசி யோகம் - சூரியனுக்கு 12 இல் சுபகிரகம் அமைந்தால் சுபாவாசி யோகமாகும்.
சுபவேசி யோகம் - சூரியனுக்கு 2 இல் சுபகிரகம் அமைந்தால் சுபவேசி யோகமாகும்.
லக்ஷ்மி யோகம் - 9 ஆம் வீட்டிற்கு அதிபதி 10 இல் ஆட்சி பெற்றாலும் லக்னதிற்கு 4, 5, 7, 9, 10 இல் அமையபெற்றலும் லக்ஷ்மி யோகமாகும்.
கிரகமாலிகா யோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் லக்னதிற்கு முன்போ அல்லது பின்போ தொடர்ச்சியாக கிரகங்கள் இருந்தால் கிரகமாலிகா யோகமாகும்.
நீச்சபங்க ராஜயோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் எதாவது ஒரு கிரகம் நீச்சமடைந்து அந்த வீட்டிற்குரிய கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால் நீச்ச தன்மை பங்கம் பெற்று "நீச்சபங்க ராஜயோகம் " தருகிறது.
நீச்ச பெற்ற கிரகம் அம்சத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலும் "நீச்சபங்க ராஜயோகம் " தருகிறது.
மேலும் ஒரு ஜாதகத்தில் எந்த கிரகம் நீசம் பெற்றிருக்கிறதோ , அந்த வீட்டிற்கு அதிபதி லக்னதிற்கு கேந்திரம் பெற்று அமைந்தாலும் "நீச்சபங்க ராஜயோகம் " தருகிறது.
பஞ்சமகா புருஷ யோகம் - பஞ்ச என்றால் 5 என்று பொருள் .5 யோகங்கள் அடங்கியது தான் பஞ்சமகா புருஷ யோகம்.அவை பின் வருமாறு......
ருச்சுக யோகம் - செவ்வாய் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது .
நரேந்திர ராஜயோகம் - ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து அல்லது ராசியிலிருந்து 1 , 5 , 9 ,10 குரு , சுக்கிரன் , தனித்து நின்ற புதன் , இவர்கள் இருந்தால் நரேந்திர ராஜயோகமாகும். இந்த யோகம் அமைந்தவருக்கு வாழ்வில் நல்ல பல நன்மைகள் கிடைக்கும் .
ஹம்ச யோகம் - குரு பகவான் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது .
பத்திர யோகம் - புதன் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது .
மாளவியா யோகம் - சுக்கிரன் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது .
சாஸ் யோகம் - சனி பகவான் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுக் 1, 4, 7, 10 இல் இருப்பது.
ஜாதக தோஷங்கள்
மாங்கல்ய தோஷம்
லக்னத்துக்கு 8 மிடம் மாங்கல்ய ஸ்தானம் ஆகும். இதில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது மிகவும் நல்லதாகும். சுப கிரகங்கள் இடம் பெற்றாலும் கூட குறைந்த அளவில் தோஷத்தை ஏற்படுத்தும் .ஆனால் பாவ கிரகங்கள் இடம் பெற்றால் மாங்கல்ய தோஷம் உண்டாகும் .இதனால் திருமணம் தாமதமாகும் மற்றும் திருமணம் நடந்த பிறகு பாதிப்பு உண்டாக்கும். தகுந்த பரிகாரம் மற்றும் கோவில் வழிபாடுகள் செய்து கொள்வது மிகவும் நல்லது.
புத்திர தோஷம்
5 ல் ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் அல்லது குரு கிரகமோ இருந்து 3 க்கு உடையவர் ஜாதகத்தில் பலம் இல்லாத நிலையில் இருந்து, 9-ம் இட பாக்கியதிபதியும் வலுவிழந்து காணப்பட்டால், புத்திர தோஷம் கண்டிப்பாக உண்டாகும்.
யோகம் கெட்ட ஜாதகம்
ஒரு ஜாதகத்தில் 9 க்கு உடைய கிரகம் 8 ல் இடம் பெற்றாலோ அல்லது 10 க்கு உடைய கிரகம் 11 ல் இடம் பெற்றாலோ அந்த ஜாதகத்தில் உள்ள யோகம் கெட்டு விடும். குரு பார்வை அந்த இடத்திற்கு கிடைத்தால் ஓரளவு யோக பலன்கள் உண்டாகும்.
பாதகமான தாக்கத்தை உருவாக்கும் பாதகாதிபதி
பாதகாதிபதி பலம் வாய்ந்த எந்த பாவங்களில் இருக்கிறாரோ அந்த பாவங்களில் உருவாகும் பலன்களில் பாதகத்தை செய்வர் .மேலும் பாதகாதிபதி எந்த இடத்தை பார்க்கிறாரோ அந்த இடத்தின் பலன்களும் பாதிக்கப்படும்.
மேஷம் , கடகம் , துலாம் , மகரம் ஆகிய லக்னங்களுக்கு - 11 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும்.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய லக்னங்களுக்கு - 9 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும்.
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னங்களுக்கு - 7 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும்.
எப்படிப்பட்ட கணவர் அமைவார்?
ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் 7 மிடத்தில் சுக்ரன் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ அழகும், அதிர்ஷ்டமும் உடைய கணவர் அமைவார்.
செவ்வாய் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ
முன்கோபம் கொண்ட கணவராகவும் மற்றும் தைர்யம் மிகுந்தவராகவும் இருப்பார்.
புதன் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ
படித்த மற்றும் புத்திசாலித்தனம் மிகுந்த கணவராக இருப்பார்.
குரு இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ
நல்ல பண்புகள் உடைய மற்றும் நீதி நெறிப்படி செயல்படுவராகவும் இருப்பார்.
சனி இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ
வயது அதிகம் உடையவராகவும் மற்றும் கோபம் அதிகம் உடையவராகவும் இருப்பார்.
ஒரு ஜாதகத்திற்க்கு திருமணம் எப்போது கைகூடும்
1) குரு கோச்சார ரீதியாக ஜாதகத்தில்
சந்திரன் இருக்கும் ராசிக்கு 5, 7 மற்றும் 9ல்(வியாழ
நோக்கம் என்று சொல்வார்கள்) வரும் காலத்திலும்
2) அதே போல் லக்கினத்திற்க்கு 7ம் இடத்தை(அதாவது லக்கினத்திற்க்கு 11, லக்கினம், மற்றும் லக்கினத்திற்க்கு 3ம் இடத்தில் குரு வரும் காலம்) கோச்சார ரீதியாக குரு பார்வையிடும் காலத்திலும்.
3) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டிற்க்கு குரு கோச்சார ரீதியாக வரும் காலத்திலும் (இந்த அமைப்பு திருமணம் நடப்பதற்க்கு கொஞ்சம் வலுவான அமைப்பு)
4) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டை குரு கோச்சார ரீதியாக பார்க்கும் காலத்திலும்
5) லக்கினாதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்
6) 7ம் அதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்
7) ராகு/கேது கோச்சார ரீதியாக ஜாதகத்தில் லக்கினம், ராசி, நவாம்ச லக்கினம், சுக்கிரன் இருக்கும் ராசி ஆகிய இடங்களுக்கு வரும் காலத்திலும்
8) சனி தசை அல்லது புத்தி காலத்திலும்
9) ஏழரைச் சனி காலத்திலும்
10) சுக்கிரனின் தசை அல்லது புத்தி காலத்திலும்
11) ராகு/கேதுவின் தசை அல்லது புத்தி காலத்திலும்
இவற்றில் ஒரு சில அமைப்புகளாவது ஒன்றாக கூடி வரும் போது கண்டிப்பாக ஜாதகருக்கு திருமணம் கைகூடும்.
2) அதே போல் லக்கினத்திற்க்கு 7ம் இடத்தை(அதாவது லக்கினத்திற்க்கு 11, லக்கினம், மற்றும் லக்கினத்திற்க்கு 3ம் இடத்தில் குரு வரும் காலம்) கோச்சார ரீதியாக குரு பார்வையிடும் காலத்திலும்.
3) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டிற்க்கு குரு கோச்சார ரீதியாக வரும் காலத்திலும் (இந்த அமைப்பு திருமணம் நடப்பதற்க்கு கொஞ்சம் வலுவான அமைப்பு)
4) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டை குரு கோச்சார ரீதியாக பார்க்கும் காலத்திலும்
5) லக்கினாதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்
6) 7ம் அதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்
7) ராகு/கேது கோச்சார ரீதியாக ஜாதகத்தில் லக்கினம், ராசி, நவாம்ச லக்கினம், சுக்கிரன் இருக்கும் ராசி ஆகிய இடங்களுக்கு வரும் காலத்திலும்
8) சனி தசை அல்லது புத்தி காலத்திலும்
9) ஏழரைச் சனி காலத்திலும்
10) சுக்கிரனின் தசை அல்லது புத்தி காலத்திலும்
11) ராகு/கேதுவின் தசை அல்லது புத்தி காலத்திலும்
இவற்றில் ஒரு சில அமைப்புகளாவது ஒன்றாக கூடி வரும் போது கண்டிப்பாக ஜாதகருக்கு திருமணம் கைகூடும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)