Vedic Jothidam

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

ஜாதக யோகங்கள்
தர்மகர்மாதிபதி யோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் 9 ஆம் அதிபதியும் 10 ஆம் அதிபதியும் ஒரே வீட்டில் இணைந்து காணப்படுவது தர்மகர்மாதிபதி யோகம். 

பரிவர்த்தனை யோகம் - எதாவது இரண்டு கிரகம் தத்தம் வீடுகளில் இருந்து மாறி இருக்கும் அமைப்பாகும்.உதாரணமாக : குரு வீட்டில் செவ்வாயும் செவ்வாய் வீட்டில் குருவும் பரிவர்த்தனையாகி காணப்படுவது பரிவர்த்தனை யோகம். 

கஜகேசரி யோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் இருந்த வீட்டிற்கு 4,7,10 ஆம் வீட்டில் குரு இருந்தால் கஜகேசரி யோகம். 

குரு சந்திர யோகம் - சந்திரனுக்கு 1 , 5 , 9 இல் குரு இருந்தால் குரு சந்திர யோகமாகும். 

சுனபா யோகம் - சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ , அந்த வீட்டிற்கு இரண்டாம் வீட்டில் சுக்கிரன் , குரு , புதன் போன்ற கிரகங்கள் இருந்தால் சுனபா யோகமாகும். 

அனபா யோகம் - சந்திரனுக்கு 12 ஆம் வீட்டில் சுக்கிரன் , குரு புதன் போன்ற கிரகங்கள் இருந்தால் அனபா யோகமாகும். 

சந்திரமங்கள யோகம் - சந்திரனுக்கு 1 , 4 , 7 , 10 இல் செவ்வாய் அமையபெற்றால் சந்திரமங்கள யோகமாகும். 

சதுஷ்ர யோகம் - 1 , 4 , 7 , 10 இல் கிரகங்கள் இருந்தால் சதுஷ்ர யோகமாகும். 

அமல யோகம் - சந்திரனுக்கு 10 இல் சுபகிரகம் இருந்தால் அமல யோகமாகும். 

சுபவாசி யோகம் - சூரியனுக்கு 12 இல் சுபகிரகம் அமைந்தால் சுபாவாசி யோகமாகும். 

சுபவேசி யோகம் - சூரியனுக்கு 2 இல் சுபகிரகம் அமைந்தால் சுபவேசி யோகமாகும். 

லக்ஷ்மி யோகம் - 9 ஆம் வீட்டிற்கு அதிபதி 10 இல் ஆட்சி பெற்றாலும் லக்னதிற்கு 4, 5, 7, 9, 10 இல் அமையபெற்றலும் லக்ஷ்மி யோகமாகும். 

கிரகமாலிகா யோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் லக்னதிற்கு முன்போ அல்லது பின்போ தொடர்ச்சியாக கிரகங்கள் இருந்தால் கிரகமாலிகா யோகமாகும். 

நீச்சபங்க ராஜயோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் எதாவது ஒரு கிரகம் நீச்சமடைந்து அந்த வீட்டிற்குரிய கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால் நீச்ச தன்மை பங்கம் பெற்று "நீச்சபங்க ராஜயோகம் " தருகிறது. 

நீச்ச பெற்ற கிரகம் அம்சத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலும் "நீச்சபங்க ராஜயோகம் " தருகிறது. 

மேலும் ஒரு ஜாதகத்தில் எந்த கிரகம் நீசம் பெற்றிருக்கிறதோ , அந்த வீட்டிற்கு அதிபதி லக்னதிற்கு கேந்திரம் பெற்று அமைந்தாலும் "நீச்சபங்க ராஜயோகம் " தருகிறது. 

பஞ்சமகா புருஷ யோகம் - பஞ்ச என்றால் 5 என்று பொருள் .5 யோகங்கள் அடங்கியது தான் பஞ்சமகா புருஷ யோகம்.அவை பின் வருமாறு...... 

ருச்சுக யோகம் - செவ்வாய் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது . 

நரேந்திர ராஜயோகம் - ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து அல்லது ராசியிலிருந்து 1 , 5 , 9 ,10 குரு , சுக்கிரன் , தனித்து நின்ற புதன் , இவர்கள் இருந்தால் நரேந்திர ராஜயோகமாகும். இந்த யோகம் அமைந்தவருக்கு வாழ்வில் நல்ல பல நன்மைகள் கிடைக்கும் . 

ஹம்ச யோகம் - குரு பகவான் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது . 

பத்திர யோகம் - புதன் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது . 

மாளவியா யோகம் - சுக்கிரன் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது . 

சாஸ் யோகம் - சனி பகவான் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுக் 1, 4, 7, 10 இல் இருப்பது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக