Vedic Jothidam

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

ஜாதக தோஷங்கள்


மாங்கல்ய தோஷம் 

லக்னத்துக்கு 8 மிடம் மாங்கல்ய ஸ்தானம் ஆகும். இதில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது மிகவும் நல்லதாகும். சுப கிரகங்கள் இடம் பெற்றாலும் கூட குறைந்த அளவில் தோஷத்தை ஏற்படுத்தும் .ஆனால் பாவ கிரகங்கள் இடம் பெற்றால் மாங்கல்ய தோஷம் உண்டாகும் .இதனால் திருமணம் தாமதமாகும் மற்றும் திருமணம் நடந்த பிறகு பாதிப்பு உண்டாக்கும். தகுந்த பரிகாரம் மற்றும் கோவில் வழிபாடுகள் செய்து கொள்வது மிகவும் நல்லது. 

புத்திர தோஷம் 

5
ல் ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் அல்லது குரு கிரகமோ இருந்து 3 க்கு உடையவர் ஜாதகத்தில் பலம் இல்லாத நிலையில் இருந்து, 9-ம் இட பாக்கியதிபதியும் வலுவிழந்து காணப்பட்டால், புத்திர தோஷம் கண்டிப்பாக உண்டாகும். 

யோகம் கெட்ட ஜாதகம் 

ஒரு ஜாதகத்தில் 9 க்கு உடைய கிரகம் 8 ல் இடம் பெற்றாலோ அல்லது 10 க்கு உடைய கிரகம் 11 ல் இடம் பெற்றாலோ அந்த ஜாதகத்தில் உள்ள யோகம் கெட்டு விடும். குரு பார்வை அந்த இடத்திற்கு கிடைத்தால் ஓரளவு யோக பலன்கள் உண்டாகும். 

பாதகமான தாக்கத்தை உருவாக்கும் பாதகாதிபதி 

பாதகாதிபதி பலம் வாய்ந்த எந்த பாவங்களில் இருக்கிறாரோ அந்த பாவங்களில் உருவாகும் பலன்களில் பாதகத்தை செய்வர் .மேலும் பாதகாதிபதி எந்த இடத்தை பார்க்கிறாரோ அந்த இடத்தின் பலன்களும் பாதிக்கப்படும். 

மேஷம் , கடகம் , துலாம் , மகரம் ஆகிய லக்னங்களுக்கு - 11 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும். 

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய லக்னங்களுக்கு - 9 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும். 


மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னங்களுக்கு - 7 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக